Thursday, December 27, 2012

கரப்பான் பூச்சிகளின் காதல்

மாநிறம், மெல்லிடை, மின்னல் பார்வை,
அதீத உணர்ச்சி, அனிச்சை அசைவுகள்

என்
மீசைக்கு சிலிர்ப்பூட்டும் சிற்றிறகு நீ...
பெண்ணுக்கும் மீசை அழகு என்று உணர்த்தினாய் நீ...

நான் செல்லும் இடத்தில் எல்லாம் நீ...
நான் உன்னை தொடர்கிறேனா என்று தெரியவில்லை...

துருதுருவென நீ செல்வதும்,
சட்டென்று நின்று என்னை பார்பதுவும்,

என் ரத்தத்தில் மின்னலை கலக்கும் reactions
இது சற்று மிகை, ஏனென்று உனக்கு தெரியுமல்லவா ???

எனக்கு ரத்தம் இல்லாமல் இருக்கலாம்,
என் ஒவ்வோறுயிர் துளியும் நீ தான்...

அணு குண்டு கூட பிரிக்க முடியாத நம் காதலை
இந்த மனிதர்கள் மிதித்தே புதைக்கிறார்கள்...

சரிவர காதலும் செய்வதில்லை, சரிவர காதல் செய்தால்,
வாழ விடுவதும் இல்லை...

- கரப்பான் பூச்சிகள் காதல் முன்னேற்ற சங்கம் 

No comments: