இந்த உலகத்தில் எல்லாம் செயற்கை தான்.....
காலையில் எழுந்து பேப்பர் வாங்கப் போனேன்,
தாய் மடியில் அலையாய்த் தவழ்ந்து,
கார்மேகத்தில் துகளாய்ப் பறந்து,
தன் உரு பெற்று மகிழ்வாய் ஓடி,
என் தாய் கொண்டு சென்ற குடத்தில் நிரம்பி,
உயிர் ஊற்றாய் என்னுள் புகுந்து,
ஒவ்வொரு முறையும் என்னுள் அற்புதம் நிகழ்த்திய நதி,
அடை பட்டுக் கிடக்கிறது பொட்டிக் கடைகளிள் பாட்டில்களில்.......
குளித்து முடித்து பூஜை அறைக்குள் சென்றேன்....
அறை முழுவதும் இரத்த வாடை,
என் கண்ணில் பட்டன இரத்த வெளத்தில் பூக்கள்.....
ஒரு நாள் வாழ்க்கை மலருக்கு,
மலரும் முன்பே பறித்து,
அர்ச்சனை செய்கிறான் இறைவனுக்கு,
நூறு ஆண்டு வாழ்க்கை வேண்டி தனக்கு....
அலுவலகம் சென்றேன் மிகுந்த கவலையுடன்,
ஜன்னலின் ஊடே பார்த்தேன், ஒரு குப்பைத் தொட்டி....
அலுவலத்தில் இருக்கும் எனக்கு, அது குப்பைத் தொட்டி,
குப்பை பொறுக்கி வாழும் அவனுக்கு, அது அலுவலகம்....
அலுவல் முடிந்து வீடு திரும்பினேன்....
மறந்து போய் விட்டது மல்லிகை....
என்னை விட பெரிய மறதி கொண்ட ஜீவனைக் கண்டேன்...
ஆண்டாண்டு காலமக மனிதனுக்காக வண்டி இழுக்கிறது,
தனது கொம்புகளை மறந்த மாடு...
சோர்வுடன் வீடு வந்தேன்....
என்னை அன்போடு வரவேற்க மகிழ்வோடு,
நின்றிருந்தார் என் காதல் கணவர்.....
Thanglish: Vaazhkayin ethartham
Intha ulagil ellam seiyarkai than.......
Kaalaiyil ezhunthu paper vaanga ponen,
Thaai madiyil alayaai thavazhnthu,
Kaarmegathil thugalaai paranthu,
Thannudaya uru petru magilvaai oodi,
en thaayin kudathil nirambi,
uyir ootraai ennul pugunthu,
ovvoru muraiyum arputham nigalthiya nathi,
adai pattu kidakkirathu potti kadaigalil bottlegalil....
Kulithu mudithu poojai araikkul sendren....
Arai muzhuvathum rattha vaadai,
En kannil pattana, rattha vellathil pookkal....
Oru naal vazhkkai malarukku,
Malarum munbe parithu,
Archanai seigiran iraivanukku,
Nooru aandu vaazhkai vendi thanakku...
Aluvalagam sendren miguntha kavalayudan,
Jannalin vazhiye paarthen, oru kuppai thotti...
Aluvalagathil irukkum enakku, athu kuppai thotti,
Kuppai porukki vaazhbavanukku athu aluvalagam...
Aluval mudinthu veedu thirumbinen...
maranthu poi vittathu malligai..
Ennai vida periya marathi konda jeevanai kanden...
Aandu aandu kaalamaga manithanukku vandi izhukkirathu,
Thanathu kombugalai marantha maadu...
Sore vudan veedu vanthen....
Ennai anbodu varaverkka magizhvodu,
nindrirunthaar en kaathal kanavar...
English: The Reality of Life.....
Early morning i went for a walk,
I saw some thing that gave me a shock...
It enjoyed as the tide and ebb,
It mesmerized me in my water tub,
It exhibited its force as flood,
And even it runs inside my blood,
Such a great river with lots of settle,
Is packed in a small bottle.....
I entered the pooja room ,
I felt the blood smell in my lung room,
I saw the dead flowers shedding blood,
It ran thru my mind like a flood...
Life span of flower is one day,
Man prays god for living many day,
So killing the flower in its birth day.....
I entered the office with lots in my mind....
Through the window, i saw a garbage bin,
For office men like me, its garbage place,
But for paper pickers in garbage, its their office....
I left the office and returned to home....
I forgot the romantic Jasmine...
Favorite of mine....
Just then i crossed a Bullock...
Working for men for thousands of years,
Without remembering the horns are theirs....
I entered my house,
With huge smile in face,
My love was waiting in terrace,
With romance and love,
I hugged my hubby as his lady love......