Saturday, October 04, 2008

காதல் தொடர்ச்சி...

காதல் என்னும் ஆற்றில், திருமணம் என்ற படகில்,
மூழ்கினாலும் கவலை இல்லை , காதலில் தானே மூழ்குகிறோம்.

சினிமாவுக்குப் போகலாமென்று, கிளம்புகையில் மழை.
சோகமாய் அமர்ந்துவிட்டாய் நீ. வெயில் அடிக்கத்துவங்கியது.
வானவில் தோன்றியவுடன், பார்ப்பதற்காக உன்னை அழைத்தேன்,
எங்கே காணோம், என்று மீண்டும் சிணுங்கினாய் அழகாய்.

இதுவரை நீ வானவில்லை பார்த்திருக்கமாட்டாய் , சரியா என்றேன்,
ஆமாம் என்றாய் நீ கவலையாக...
சூரியன் இருக்கும் போது , நட்சத்திரம் தெரியாது,
அது போல தான் நீ இருக்கும் பொது, வானவில் தெரியாது.

வீட்டுக்குளே போ, நானாவது வானவில்லை பார்கிறேன் என்றேன்.
உண்மை தான், ஆனால் ஒரு வித்யாசம் உண்டு.
வானவில் வெறும் வண்ணங்களின் சேர்க்கை,
ஆனால் நீ, அழகுகளின் சேர்க்கை.

இப்பொழுது பார், வானம் வானவில்லை பிரதிபலிக்கவில்லை ,
உன்னை தான் பிரதிபலிக்கிறது.
என்ன என்றாய் கண்களால் ?
நீ நீல நிற சேலை அணிந்தவுடன் வானவில்லும் நீலமாகி,

வானமும் உன் சேலையைத் தான் பிரதிபலிக்கிறது
என்று உன்னை சுற்றிக்கொண்டேன்.
உன் சேலையின் வைர ஊசிகளைப் போல
செல்லமாய்க் கிள்ளி விட்டு அழகைப் பரப்பச் சென்றாய்...