Wednesday, July 23, 2008

காதல் ஆரம்பம்

எங்கள் பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டினார் அப்பா,
எனக்கு பிடிக்கவில்லை. அந்த பழைய வீடு எனக்கு பிடிக்கும்.
புது வீடு மிகவும் அன்னியமாக இருந்தது. இரண்டு மாடி வீடு.
வெறுப்புடன் தான் தொடங்கினேன் அங்கு வசிக்க.
மேல் மாடிக்கு ஒரு தேவதை குடி வரும் வரை,
என் அப்பா செய்த உருப்படியான வேலை இது தான்.

வந்த உடனே கண்கள் உரச, நான் சொக்கித் தான் போனேன்.
தேவதை எங்கள் வீட்டில் குடி புகுந்தாள்
என சுவரொட்டி அடிக்க மனம் துடித்தது.
காலம் செல்லச் செல்ல, சிறிது முன்னேற்றம்,
பேசத் தொடங்கினோம். எனக்கு பிடித்த வண்ணமே அவள் இருந்தாள் ,
இல்லையென்றால், அவளுக்கு பிடித்த வண்ணம் நான் மாரிவிட்டேனோ ?

காலம் இன்னும் வேகமாய் சுழன்றது, காதல் மனதில் சுழன்றது.
கடிதங்கள் எழுதினேன், கவிதைகள் எழுதினேன்,
அதைவிட முக்கியம் அவைகளை உன்னிடம் கொடுத்தேன்.
காதல் பிறந்தது, காதலியாய் நீயும் கிடைத்தாய்.
வீடு மாறினாய், வாசம் மாறினாய், வாக்கு மாறவில்லை நாம்.
நன்கு படித்தேன், வாழ்வில் உயர்ந்தேன், உன்னை கரம் பிடித்தேன்.

ஆரம்பமானது நம் காதல் வாழ்வு.




ஆரம்பித்தது, தொடரும் இனி பகுதிகளாக....